1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 மார்ச் 2019 (15:23 IST)

தோனியை ஏமாற்றிய அம்ரபளி– உச்சநீதிமன்றத்தில் புகார் !

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி அம்ரபளி எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீது புகார் தொடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பல்வேறு நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக இருந்து வருகிறார். அதில் ஒரு நிறுவனமாக அம்ரபளி க்ரூப்ஸ் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்க்ய் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் விளம்பரத் தூதராகவும், அந்த நிறுவனத்தின் விளம்பரப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வீடுகளை வழங்கவில்லை என்று சுமார் 46,000 பேர் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இது சம்மந்தமான வழக்கில் நிறுவனத்தின் சொத்துகளை இணைக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் விளம்பரதாரராக நடித்த தோனி மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து  2016ஆம் ஆண்டு முதல் அம்ரபளி நிறுவனத்திலிருந்து தோனி விலகிவிட்டார். இதையடுத்து தனக்குத் தரவேண்டிய பாக்கித்தொகையான 38 கோடி ரூபாயைப் பெற்றுத்தருமாறு இப்போது உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.இது சம்மந்தமாக அம்ரபளி நிறுவனத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களின் நகல்களையும் தோனி சமர்ப்பித்துள்ளார்.