வேலூர் தேர்தல் ரத்து: தவறு நடந்துவிட்டது? எடப்பாடியார் திடீர் டிவிஸ்ட்!

Last Updated: புதன், 17 ஏப்ரல் 2019 (09:44 IST)
கடந்த 30 ஆம் தேதி துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது 10 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 
 
அதன் பின்னர் காட்பாடியில் சிமெண்ட் குடோனில் ரூ.11.53 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால், வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படும் என அப்போது முதலே யூகங்கள் வெளியாகிக்கொண்டுதான் இருந்தன. 
 
இந்நிலையில் வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்யும்படி குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த பரிந்துரையை ஏற்று தற்போது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திமுக சார்பில் இது ஜனநாயக படுகொலை, திமுகவை அவமான படுத்தும் நோக்கத்தில் இவ்வாறு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. மறுபுறம் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் தேர்தலின்போது பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 
ஆனால், தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து கூறியதாவது, வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்க கூடாது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றார். 
 
வேலூர் தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் - அதிமுக சார்பில் சண்முகம் உட்பட சுயேட்சை வேட்பாளர்கள என மொத்தம் 28 பேர் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :