4 தொகுதிகள் தர தயார்: டெல்லி முதல்வருக்கு டுவிட்டரில் அழைப்பு விடுத்த ராகுல்காந்தி!

Last Modified செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (17:28 IST)
டெல்லியில் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து கடந்த சில வாரங்களாக இரு தரப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கூட்டணி அமைவது போல் பேச்சுவார்த்தை இருந்தாலும் திடீர் திடீரென டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டணிக்கு எதிராக பேசி வருவதால் அங்கு குழப்பமான நிலையே ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் சற்றுமுன் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரடியாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி சம்மதித்தால் நான்கு தொகுதிகளை விட்டுக்கொடுக்க தயார் என்று அவர் தெரிவித்துள்ளார். இனிமேல் முடிவெடுக்க வேண்டியது ஆம் ஆத்மிதான் என்றும், பாஜகவை டெல்லியில் இருந்து விரட்ட இந்த கூட்டணி அவசியம் என்றும் கூறியுள்ளார்.
Aravind Kejriwal
டெல்லியில் சாந்தினி செளக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, நியூடெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி மற்றும் தெற்கு டெல்லி என ஏழு தொகுதிகள் உள்ளது என்பதும், கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஏழு தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :