வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2019 (08:35 IST)

அமமுக அலுவலகத்தில் விடிய விடிய சோதனை: ரூ.1.5 கோடி பறிமுதல் என தகவல்!

நேற்று ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில்  விடியவிடிய நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 1.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்த வீடியோவும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது
 
இந்த நிலையில் ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் நேற்று சோதனையிட வந்த அதிகாரிகளை அமமுக தொண்டர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவலுக்கு வந்த போலீசார் வானத்தை நோக்கி சுட்டனர். 
 
இந்த நிலையில் ஆண்டிபட்டியில் அமமுகவினர் 150 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சோதனைக்கு வந்த அதிகாரிகளை தடுத்ததாக ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பணப்பட்டுவாடா நடப்பதாக வந்த தகவலின் பேரில் சோதனை நடத்த அதிகாரிகளும் போலீசார்களும் வந்ததாகவும், சோதனைக்கு வந்த போலீசை தடுத்ததால்  துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.