1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2019 (08:50 IST)

நம்ம ஊரு தங்கபாலுவுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்த கேரள காங்கிரஸ்!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் தமிழகத்திற்கு தேர்தல் பரப்புரை செய்ய வந்தபோது அவரது ஆங்கில உரையை தங்கபாலு தமிழில் மொழி பெயர்த்தார். அவரது மொழிபெயர்ப்பு பெரும் சர்ச்சையாகி மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு சரியான தீனியாக அமைந்தது
 
இந்த நிலையில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி நேற்று அங்கு தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவரது உரையை மலையாளத்தில் மொழி பெயர்த்த கேரள காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் திணறியதை பார்க்க முடிந்தது. ஒவ்வொரு முறையும் ராகுல்காந்தி தான் பேசியது என்ன? என்பதை மீண்டும் அந்த பிரமுகரிடம் விளக்கியதும், பின்னர் அதை அந்த பிரமுகர் தட்டுத்தடுமாறி மலையாளத்தில் மொழி பெயர்த்ததும் பிரச்சாரத்தையே கேலிக்கூத்தாக்கியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன
 
ஒரு கட்டத்தில் மைக்கே இல்லாமல் அந்த பிரமுகர் மொழி பெயர்க்க, ராகுல்காந்தியே மைக்கை அவர் முன் வைத்த கொடுமையும் நடந்தது. அகில இந்திய அளவில் உள்ள ஒரு தலைவர், பிரதமர் வேட்பாளரின் உரையை மொழி பெயர்க்க கேரளாவில் ஒரு நல்ல ஆள் இல்லையா? என்பதே இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலரின் ஆதங்கமாக இருந்தது