ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2019 (15:33 IST)

காலையில் தேர்தல் பிரச்சாரம், நைட் சூட்டிங்: உதயநிதி படு பிஸி!!

திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இப்போது இந்த தேர்தலில் அரசியல் ஆழத்தை கற்றுக்கொள்கிறாராம். 
 
உதயநிதி ஸ்டாலின் சமீபகாலமாக திமுக நடத்தும் கண்டன பொதுக்கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் ஆகியவற்றில் கலந்துக்கொண்டு வருகிறார். அதோடு, திமுக போட்டியிடும் 20 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி ஆகியவற்றுக்கு நேரடி பிரச்சாரத்திற்கு தயாராகியுள்ளார். 
 
நேற்று வேலூர் மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு பிரச்சாரம் செய்தார். இதனையடுத்து உதயநிதியின் பிரச்சார பயணம் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், மிஷ்கின் இயக்கி வரும் சைக்கோ மற்றும் மாறன் இயக்கி வரும் கண்ணை நம்பாதே ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். அதாவது காலையில் தேர்தல் பிரச்சாரன் இரவில் படபிடிப்பு என உதயநிதி ஒரே பிஸியாம். 
 
உதயநிதியின் பிரச்சார பயணத்துக்கு தனியாக பிரச்சார வாகனம் எல்லாம் தாயார் செய்யப்பட்டுவிட்டதாம். இந்த பிரச்சார பயணத்தில் மூலம் தன் மீது விழுந்துள்ள வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை போக்கி, நான் திமுகவின் தொண்டன் என நிரூபிக்க உள்ளாராம் உதயநிதி ஸ்டாலின்.