புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (08:53 IST)

இவருக்கா இந்த நிலை? விஜயகாந்தை கண்டு தொண்டர்கள் வேதனை!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் எப்போது பிரச்சாரத்திற்கு வருவார் என காத்துக்கிடந்த தொண்டர்களுக்கு, மகிழ்ச்சி அளிக்கும் விதமாக விஜயகாந்த் நேற்று மூன்று இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். 
 
அவரை பார்த்ததில் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், அவரின் நிலையை கண்டு பலர் வேதனையடைந்தனர். வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே அவர் தனது பிரச்சாரத்தை துவங்கினார். அங்கு மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். 
 
பின்னர், கொளத்தூர், பெரம்பூர், திரு.வி.க. நகர், ராயபுரம், திருவொற்றியூர், ஆர்.கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடசென்னை தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜூக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
அதனை தொடர்ந்து இறுதியாக விருகம்பாக்கம் பகுதியில் தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனுக்கு பிரச்சாரம் செய்தார். இந்த மூன்று இடங்களிலும் விஜயகாந்த் பெரிதாக ஏதும் பேசவில்லை, குறைவாகவே பேசினார். ஒரு சில இடங்களில் அவர் பேசியது கூட சரியாக புரியவில்லை. 
 
கடந்த தேர்தல்களில் எல்லாம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர பிரச்சாரம் செய்தார். அவரது பேச்சால் அரசியல் களம் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில் அவரை இப்படி காண்பது தொண்டர்களுக்கு மிகுந்த வேதனை அளித்துள்ளது.