புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2019 (19:44 IST)

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பிரசாரம் : தொண்டர்கள் குஷி

அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசரம் செய்து வருகின்றனர். காங்கிரஸா - பாஜகவா  என்று தேசிய அரசியலில் மல்லுக்கட்டிக் கொண்டுள்ளன. அதிமுக மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் பாஜக, தேமுதிக, பாமக கட்சிகள் இணைந்துள்ளன.
இந்நிலையில் தேமுதிக தலைவர் சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுவருகிறார். அதனால் அவரால் பிரசாரம் செய்ய முடியாத நிலை இருந்தது.ஆனால் சமீபத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேப்டன் பிரசாரம் செய்யும் தேதியை நேற்று அறிவித்தார். அதன்படி இன்று அவர் பேசுவதாக கூறியிருந்தார். 
 
இந்நிலையில் இன்று அவர் சொன்னது போல் விஜயகாந்த் தம் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். இதனால் தம் கட்சியின் தலைவரை பார்த்த சந்தோஷத்தில் தொண்டர்கள் குஷியடைந்தனர்.
 
நாளையுடன் பிரசாரம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.