செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2019 (09:34 IST)

யாரோ சாப்பிட ஊரே வரிசையில் – நடிகர் பார்த்திபன் கிண்டல் பதிவு !

நடிகர் பார்த்திபன் தனது வாக்கைப் பதிவு செய்ய வரிசையில் நிற்கும் வீடியோவை வெளியிட்டு தேர்தலையும் அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்துள்ளார்.

தமிழகத்தில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தத்தமது தொகுதிகளில் தங்கள் வாக்கைப்பதிவு செய்துவருகின்றனர். ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, கனிமொழி, கமல் ஆகியோர் காலையிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

திரைநட்சத்திரங்களான ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி ஆகியோரும் தத்தமது தொகுதிகளில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் டிவிட்டரில் தான் வாக்களிக்க வரிசையில் நிற்கும் வீடியோவை வெளியிட்டு ‘ யாரோ சாப்பிட ஊரே வரிசையில்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சையானக் கருத்துகளுக்காகப் புகழ்பெற்றவரான பார்த்திபன் தேர்தல் பற்றியும் அரசியல்வாதிகள் பற்றியும் தனது குறும்பான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.