நாளை மாலை 6 மணிக்கு இரண்டு பெரிய அறிவிப்புகள்: என்னென்ன தெரியுமா?

Last Modified வெள்ளி, 8 மார்ச் 2019 (20:06 IST)
தமிழ் சினிமா உலகில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது நான்கு அல்லது ஐந்து படங்கள் வெளியாவது போலவே நான்கைந்து படங்களின் பூஜைகளும், டைட்டில் வெளியீடும் நடந்து வருகிறது
அந்த வகையில் நாளை மாலை 6 மணிக்கு இரண்டு முக்கிய பிரபலங்களின் படங்கள் டைட்டில் அறிவிக்கப்படவுள்ளது. முதலில் பார்த்திபன் இயக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டிலை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிடவுள்ளார்.

அதேபோல் ஆர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டிலும் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தை
நாய்கள் ஜாக்கிரதை', 'மிருதன்', 'டிக் டிக் டிக்' போன்ற படங்களை இயக்கிய சக்தி செளந்திரராஜன் இயக்க ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார்.

இந்த இரண்டு அறிவிப்புகளும் நாளை டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆர்யாவின் அடுத்த பட டைட்டிலை அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வரவேற்க காத்திருக்கின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :