தேர்தல் பாதுகாப்பு – 150 துணை ராணுவ கம்பெனிகள் தமிழகம் வருகை !
தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்க இருக்கும் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 150 துணை ரானுவப் படைகள் வர இருக்கின்றன.
நாடு முழுவதும் ஏப்ரல் 11 முதல் மே 21 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்க இருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரேக் கட்டமாக 39 மக்களவைத் தொகுதி தேர்தலும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக தமிழக தேர்தல் ஆணையம் ராணுவப்படையின் உதவியைக் கோரியுள்ளது.
இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களிடம் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 19,655 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளன. கடந்த தேர்தலின்போது 200 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டு 140 கம்பெனியை ஆணையம் அனுப்பி வைத்தது. அதேப்போல இம்முறையும் 200 கம்பெனி துணை ரானுவப்படைக் கேட்கப்பட்டது. அதில் 160 துணை ரானுவப்படையை அனுப்ப தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஏற்கனவே 10 துணை ராணுவப்படையினர் தமிழகத்திற்கு வந்துவிட்டனர். மீதமுள்ள 150 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஏப்ரல் 16 ஆம் தேதி தமிழகம் வர இருக்கின்றனர். அவர்களை எங்கெங்கு பணியில் அமர்த்துவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.