புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 10 மார்ச் 2019 (13:27 IST)

ஒத்த செருப்புக்காக விஜய்சேதுபதிக்கு நன்றி தெரிவித்த பார்த்திபன்!

தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பார்த்திபன். இவர் சிறந்த இயக்குனர் என்பதையும்  தாண்டி மிகச்சசிறந்த நடிகரும் கூட. 


 
தமிழ் சினிமாவில் சுகமான சுமைகள், உள்ளே வெளியே, சரிகமபதநி, புள்ளைக்குட்டிக்காரன், ஹவுஸ்புல், இவன், குடைக்குள் மழை, பச்சைக் குதிரை உள்ளிட்ட பல படங்களை தயாரித்து இயக்கி நடித்து வெற்றி  கண்ட பார்த்திபன், தற்போது ‘ஒத்த செருப்பு’ என்ற படத்தை தயாரித்து இயக்கி நடிக்க உள்ளார் . 
 
இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடிக்கவுள்ள ‘ஒத்த செருப்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை நடிகர் விஜய்சேதுபதி நேற்று வெளியிட்டார்.இப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். தன் படத்தின் முதல் பார்வை மோஷன் போஸ்ட்டரை வெளியிட்ட  மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு பார்த்திபன் நன்றி தெரிவித்துள்ளார் . 
 
பேச்சில் வித்தகனான பார்த்திபனின் இந்த படைப்பும் வெளிவரும் நேரத்திலே ஹவுஸ்ஃபுல் ஆகி வசூலை வாரிக்குவிக்க வாழ்த்துகிறோம்.