’பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகள் ?’ பார்த்திபன் கிண்டல் டுவீட்டு

parthiban
Last Updated: செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (18:21 IST)
அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மழைப் பெய்து ஓய்ந்தது போன்று  இன்று மாலையுடன் அரசியல் கட்சிகளின் பிரசாரம் முடிவடைந்தது.
திரையிலும், மேடைப் பேச்சிலும் வித்தியாசமான கருத்துக்களை கூறுபவர் இயக்குநர் ஆர். பார்த்திபன். இவரது வித்தியாசமான பேச்சைக் கேட்பதற்காகவே பல ரசிகர்கள் இவருக்கு உண்டு இந்நிலையில் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு டிவிட்டை பதிவு செய்துள்ளார்.
 
அதில் அவர் கூறியுள்ளதாவது :
 
மாம்பழமோ? மாபெரும் பழமோ? பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கு தேர்தல் = தேத்துதல் ( பணம்) வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை வீசுகிறார்கள் அதுகூட திமிங்கல் வேட்டைக்கே. காசு வாங்காமல் ஓட்டு போடுவோம் - மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு என்று பதிவிட்டுள்ளார். 
parthiban

மாம்பழமோ மாபெரும் பழமோ என்று பாமக கட்சியைத்தான் இவர் விமர்சனம் செய்துள்ளதாகவும் பேச்சு எழுகின்றது. 
 
மேலும் பார்த்திபனின் இந்த டுவிட்டுக்கு பலரும் லைக்ஸ் போட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :