புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கட்டுரைகள்
Written By Sinoj
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (22:09 IST)

முயற்சிகளில் இருந்து வெற்றி - சினோஜ் கட்டுரை

success
'உங்களுக்குப் பிடித்த நியாயமான ஒன்றைச் செய்ய உங்களுக்கு முழு உரிமையுண்டு. அதைச்செய்ய தொடங்குவதில் தடையே இல்லாதபோது, செய்யாமல் போனால் உனது தவறு.'
எதுவும் செய்யாமல் இருப்பதற்கு எதாவதொன்று செய்யுங்கள். முயற்சிகளில் இருந்து வெற்றிகள் பிறக்கும்!
அடுத்தவர்களின் பாராட்டுகளுக்காக நாம் வாழ்ந்துகொண்டிருப்போமானால், இந்தப் பூமியே தலைகீழாய் நின்றாலும் அது நடக்காது.
இது சுயநல பூமி.

நாமிருக்கும் இடத்திற்கே வலிய வந்து நம்மைத் தூக்கி வெற்றித்தாயின் இடுப்பில் அமரவைக்க யாரும், எவரும் வரப்போவதில்லை.
கடவுளையும் குற்றம்சொல்லும் பூமியிது. நாம் மனிதர்கள் மட்டும்தான் என்பது நியாபகம் இருக்கட்டும்!

#சினோஜ்