காத்துவாக்குல ரெண்டு காதல்... டைட்டில் லுக் போஸ்டர் வெளியிட்ட சமந்தா!

Papiksha Joseph| Last Updated: புதன், 10 பிப்ரவரி 2021 (15:17 IST)

காத்துவாக்குல ரெண்டு காதல் டைட்டில் லுக் போஸ்டர்!
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லை எனக் கருதியதால் அவர் நடிக்க தயங்கியதாக சொல்லப்பட்டது. ஆனால் அதன் பிறகு அந்த கதாபாத்திரத்துக்கு விக்னேஷ் சிவன் காட்சிகளை அதிகப்படுத்தினார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. தற்போது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகை சமந்தா இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :