ஞாயிறு, 15 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 7 பிப்ரவரி 2026 (18:56 IST)

துபாய் சென்று அஜித்தை பார்த்த சிவகார்த்திகேயன்!... வைரல் புகைப்படங்கள்!...

sk ajith
நடிகர் அஜித் கார் ரேசில் அதிக ஆர்வம் கொண்டவர். அவர் இளைஞராக இருந்தபோது பைக் ரேஸில் கலந்து கொண்டு வந்தார். கடந்த சில வருடங்களாக கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார். இதற்காகவே ஒரு பிரத்யேக அணியை உருவாக்கியிருக்கிறார் அஜித்.

உலகத்தின் பல இடங்களிலும் நடக்கும் கார் ரேஸ் போட்டிகளில் அஜித்தின் டீம் கலந்து கொண்டு வருகிறது. முதன் முதலில் துபாயில் இந்த அணி கலந்து கொண்ட போது மூன்றாம் பரிசையும் வென்றனர். அதன்பின் சில ஐரோப்பிய நாடுகளில் போட்டி நடைபெற்றது. அதன்பின் மலேசியாவில் நடைபெற்றது.

மலேசியாவில் நடந்த கார் ரேஸ் போட்டிகளில் அஜித் கலந்து கொண்ட போது சினிமா பிரபலங்கள் பலரும் அவரை நேரில் சென்று சந்தித்தார்கள். மாதவன், நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஜிவி பிரகாஷ், நடிகர் சிம்பு, சிபிராஜ், யுவன் சங்கர் ராஜா ஆகியோர் சென்று அஜித்தை சந்தித்தார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது.
sk ajith

தற்போது அஜித் துபாயில் நடந்து வரும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், திடீரென அந்த இடத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் விசிட் அடித்திருக்கிறார். அவர் அஜித்துடன் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.