திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By
Last Updated : திங்கள், 13 மே 2019 (19:02 IST)

காதலிக்கு கண்டீஷன் போட்ட காதலர்! கடுப்பில் முன்னாள் காதலர்!

டஜன் கணக்கில் காதல் தோல்வி அடைந்த நடிகர் ஒருவர் முன்னாள் காதலிக்கு ரூட் விடுகிறார். ஆனால் அந்த நடிகையின் தற்போதைய காதலரோ காதலியை பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார். 


 
இயக்குனர் ஒருவர் டாப் நடிகையை காதலித்துவருகிறார். காதல் கல்யாணம் வரை சென்று விட காதலிக்கு ஏகப்பட்ட கண்டீஷன் போட்டு வருகிறாராம் அந்த இயக்குனர் காதலர். 
 
நீ யாருடன் வேண்டுமானாலும் நடி ஆனால் அந்த ஹீரோவுடன்( முன்னாள் காதலர்)  மட்டும் நடிக்கவே கூடாது என்று அந்த காதலிக்கு  காதலர் உத்தரவிட்டுள்ளாராம். இதனால் முன்னாள் காதலருடன் சேர்ந்து நடிக்க வந்த வாய்ப்பை தன் தற்போதைய காதலருக்காக ஏற்க மறுத்துள்ளார் நடிகை. 
 
முன்னாள் காதலருக்கு நடிகை மீது இன்டிரஸ்ட் சுத்தமாக இல்லையாம். இருந்தாலும் சூதானமாக இருக்க வேண்டும் என்று இப்படி ஒரு உத்தரவை போட்டுள்ளாராம் காதலர். இதனால் அந்த முன்னாள் காதலர் கடுப்பில் உள்ளாராம்.