செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஜோடியை கடுமையாக விமர்சித்த பிரபல பாடகர்கள்

Last Updated: புதன், 1 மே 2019 (11:56 IST)
பிரபல தொலைக்காட்சி பாடகர்களுக்காக நடத்திய ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஜோடி. இவர்கள் நாட்டுபுற பாடல்களை மட்டுமே பாடி பெற்ற ரசிகர்கள் ஏராளம். அவர்கள் தற்போது சினிமாவிலும் பாட்டு பாட துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் பிரபல பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி இருவரும் அளித்துள்ள பேட்டியில் செந்தில்-ராஜலக்ஷ்மி  ஜோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
 
மேலும் அவர்கல் "பேசுவது எல்லாம் இரட்டை அர்த்தம் கலந்ததாகவும், ஆபாசமாகவும் உள்ளது. மனைவியை பக்கத்தில் வைத்துகொன்டே  வேறு ஒரு பெண்ணிடம் அசிங்கமாக சைகை செய்கிறான். இதையெல்லாம் யூடியூப்பில் பார்த்து நொந்துபோனேன்" என புஷ்பவனம் குப்புசாமி  கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
இந்நிலையில் டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடப்பது எதுவும் ரியாலிட்டியாக இல்லை என்றும். யார் வெற்றி பெற வேண்டும் என முதலிலேயே முடிவு செய்துவிட்டுதான் நிகழ்ச்சியே நடக்கும் என அவர்கள் கூறியுள்ளார். மேலும் இவர்களை பார்க்கும்போது நம்  பாடுவதையே நிறுத்திவிடலாமா என்றும்கூட தோன்றுகிறது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :