ஏன் மதத்தோடு நிறுத்தி வீட்டீர்கள் – கஸ்தூரி கேள்வி !
இந்து தீவிரவாதம் பற்றிப் பேசியுள்ள கமலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
பள்ளப்பட்டியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் ’உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் அவரது கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன். இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும் என்றும், தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு’ என்று கூறியுள்ளார்.
கமலின் இந்த பேச்சுக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வந்துள்ளன. தமிழிசை மற்றும் விவேக் ஓப்ராய் போன்ற பிரபலங்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இப்போது நடிகை கஸ்தூரியும் கமலுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கஸ்தூரி தனது டிவிட்டரில் ‘கமலின் பல சிந்தனைகளுக்கு நான் ரசிகை. பிரித்தாளும் அரசியல் நாடு முழுவதும் இருக்க கமலின் அரசியல் புதுமையாக இருந்தது. ஆனால் அவரும் பெயர்களை சொல்லி அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளார். மத ரீதியாக பேசி மக்களை திருப்திபடுத்துவதோடு ஏன் நின்றுவிட்டீர்கள். சாதி அரசியலையும் எடுத்துக்கொண்டு வாருங்கள். கோட்சேவை பிராமன தீவிரவாதி என சொல்லி மற்றக் குழுக்களின் ஆதரவையும் கோருங்கள்’ எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.