வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By cauveri manickam
Last Modified: சனி, 26 ஆகஸ்ட் 2017 (17:19 IST)

உலக நாயகனுடன் மீண்டும் இணைகிறாரா நடிகை?

உலக நாயகனுடன் மீண்டும் இணையப்போவதாக வெளியான செய்தியால், கோபத்தில் இருக்கிறார் நடிகை.



 
உலக நாயகனுடன் கிட்டத்தட்ட 13 வருடங்களாக இணைந்து வாழ்ந்தார் இந்த நடிகை. தாலி கட்டாமலே, எந்த உறவு என்று சொல்லாமலே அந்த பந்தம் தொடர்ந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு உலக நாயகனை விட்டு விலகி தனியாக வந்துவிட்டார் நடிகை. ‘தன் மகளின் எதிர்காலத்தைக் கருதி இந்த முடிவை எடுத்ததாகவும்’ அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், உலக நாயகனுடன் அவர் மீண்டும் இணைந்து வாழப் போவதாக வீடியோ செய்தி ஒன்று வெளியானது. அதைப் பார்த்து கடும் கோபத்தில் உள்ளார் நடிகை. “முட்டாள்கள் பேசுகிறார்கள். நாய்கள் குரைக்கும். நான் விலகி வந்துவிட்டேன். எல்லோரும் அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்ள வேண்டும். எது முக்கியமோ, அதைச்செய்ய வேண்டும்” என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் இந்த நடிகை.