செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: சனி, 26 ஆகஸ்ட் 2017 (15:32 IST)

‘இறைவி’ என கடைக்குப் பெயர்வைத்த விஜய் சேதுபதியின் சகோதரி

விஜய் சேதுபதியின் சகோதரி, தான் புதிதாகத் தொடங்க உள்ள கடைக்கு ‘இறைவி’ எனப் பெயர் சூட்டியுள்ளார்.


 

 
விஜய் சேதுபதியின் சகோதரி ஜெயஸ்ரீ, தாம்பரம் அருகிலுள்ள செம்பாக்கத்தில் துணிக்கடை ஒன்றைத் தொடங்கப் போகிறார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக ஆடைகள் கிடைக்கும் இந்தக் கடைக்கு, ‘இறைவி’ எனப் பெயர் வைத்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி இந்தக் கடை திறப்பு விழா காணப் போகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, கமாலினி முகர்ஜி, அஞ்சலி, பூஜா தேவரியா நடிப்பில் வெளியான படம் ‘இறைவி’ என்பது குறிப்பிடத்தக்கது.