தொடர்புடைய செய்திகள்
- புது உறவுமுறையுடன் கார்த்தி - ஜோதிகா: சூர்யா வெளியிட்ட டீசர் இதோ...
- கார்த்தி, ஜோதிகா நடிக்கும் ’தம்பி’ படத்தின் ஃபர்ட்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
- ’நேருக்கு நேரில் ’ மோதிய விஜய் - சூர்யா : அடுத்து ஜெயிக்கப் போவது யார் ?
- மாமனார் வீட்டிற்கு விசிட் அடித்த சூர்யா...ஜோதிகா வீட்டில் இத்தனை பேரா..!
- ரஜினி அஜித்தை அடுத்து சூர்யா படத்தில் கமிட் ஆன பிரபல இசையமைப்பாளர்
விஜய் பாணியை காப்பி அடிக்க சூர்யா முயற்சியா?
கடந்த சில ஆண்டுகளாக விஜய், தான் நடித்து வரும் படத்தில் ஒரே ஒரு பாடலை பாடி வருவது தெரிந்ததே. ஆரம்ப கட்டத்தில் அவர் பாடும் பாடலின் போது ’இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்’ என்ற டைட்டில் வருவதும் உண்டு
இந்த நிலையில் சமீபகாலமாக அவர் பாடிய பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக ’பிகில்’ படத்தில் அவர் பாடிய பாடல் மிகப்பெரிய ஹிட் என்பதும் அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் மக்களைக் கவர்ந்தது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் விஜய்யை அடுத்து நடிகர் சூர்யாவும் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை பாட இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதன் முதல் கட்டமாக தற்போது சூர்யா நடித்துவரும் ’சூரரைப்போற்று’ என்ற படத்தில் ஒரு பாடலை பாட இருப்பதாகவும் இதற்காக அந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் ஹிப்ஹாப் பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது
சூர்யா பாடும் இந்த பாடலின் ஒலிப்பதிவு விரைவில் நடைபெறும் என்றும் இந்த பாடல் ஹிட்டானால் இனி விஜய் போலவே சூர்யாவும் தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலை பாட தொடர்ந்து பாட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது
ஏற்கனவே அஞ்சான் படத்திலும் ஒரு விளம்பரப் படத்திலும் சூர்யா பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
