ரஜினி அஜித்தை அடுத்து சூர்யா படத்தில் கமிட் ஆன பிரபல இசையமைப்பாளர்

Last Modified செவ்வாய், 12 நவம்பர் 2019 (21:00 IST)
அஜித் நடித்த விஸ்வாசம், சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை உள்பட பல வெற்றிப் படங்களுக்கு இந்த ஆண்டு இசையமைத்த டி இமான் அடுத்ததாக சூர்யா நடிக்கவிருக்கும் படத்துக்கு இசையமைக்க உள்ளார் என்று கூறப்படுகிறது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி உள்ள ’தலைவர் 164’ படத்திற்கு சமீபத்தில் இசை அமைக்க ஒப்புக் கொண்ட டி இமான், அடுத்ததாக சூர்யா நடிப்பில் ஹரி இயக்கும் படத்தில் இசையமைக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

சூரரைப்போற்று படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் சிறுத்தை சிவா திடீரென ரஜினி படத்தில் கமிட்டானதை அடுத்து தற்போது அவர் ஹரி இயக்கும் படமொன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் இசையமைக்க டி இமான் ஒப்பந்தமாகி உள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
அதுமட்டுமின்றி ரஜினி படத்தை முடித்துவிட்டு மீண்டும் சூர்யா படத்தை இயக்க உள்ள சிறுத்தை சிவாவின் படத்திலும் டி இமான் தான் இசையமைப்பார் என்று தெரிகிறது. ரஜினி, அஜீத், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் டி இமான் கோலிவுட்டின் நம்பர் ஒன் இடத்தை நோக்கி முன்னேறி சென்று கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :