ஒல்லி நடிகரும், சிவ நடிகரும் மோதிக் கொள்கிறார்களா?
ஒல்லி நடிகரும், சிவ நடிகரும் மோதிக் கொள்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நடிக்கத் தொடங்கிய சிவ நடிகரை வளர்த்து விட்டது ஒல்லி நடிகர் தான். அடுத்தடுத்து படங்கள் கொடுத்து, அவரை ஆளாக்கி விட்டவர் ஒல்லி தான். நகமும் சதையுமாக இருந்த இருவரும், சில வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டனர்.ஆனால், மேடைகளில் மட்டும் நாங்கள் நண்பர்கள் என்று காட்டிக் கொள்வார்கள். சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியத்துக்காக சினிமாத்துறை சார்பில் நடைபெற்ற மவுனப் போராட்டத்தில் கூட இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், தான் தயாரித்து, நடித்துள்ள படம் செப்டம்பரில் ரிலீஸாகும் என நேற்று முன்தினம் அறிவித்தார் ஒல்லி. உடனே, தன்னுடைய படம் செப்டம்பர் 13ஆம் தேதி ரிலீஸாகும் என நேற்று அறிவித்துள்ளார் சிவ நடிகர். இதனால், இருவரும் மோதிக் கொள்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.