இயக்குநருக்கு இரண்டாம் முறையாகக் கார் பரிசளித்த ‘கில்மா’ தயாரிப்பாளர்

Green
CM| Last Updated: திங்கள், 21 மே 2018 (21:24 IST)
‘கில்மா’ படத்தை இயக்கிய இயக்குநருக்கு, இரண்டாம் முறையாகக் கார் பரிசளித்துள்ளார் தயாரிப்பாளர்.

 
சினிமா இண்டஸ்ட்ரியில் மட்டுமல்ல, பொதுமக்களிடம் கூட ‘கில்மா தயாரிப்பாளர் யார்?’ என்று கேட்டால், எல்லாரும் பச்சை நிறுவனத்தை நோக்கித்தான் கைகாட்டுவார்கள். ‘கில்மா’ படங்கள் எங்கு இருந்தாலும், தன்னால் தயாரிக்க முடியவில்லை என்றாலும், வாங்கி வெளியிட்டாவது கல்லா கட்டுவதில் கெட்டிக்காரர் இந்த தயாரிப்பாளர்.
 
சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளான கில்மா படத்தின் இயக்குநர், இதற்கு முன்பும் ஒரு கில்மா படத்தைத்தான் இயக்கியிருந்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதும், கல்லா நிரம்பியதால் அவருக்கு ஒரு ஆடி காரைப் பரிசளித்தார் தயாரிப்பாளர். தற்போது இந்தப் படமும் சக்சஸ் ஆகி கல்லா கட்டியதால், மறுபடியும் ஒரு காரைப் பரிசளித்துள்ளாராம் தயாரிப்பாளர்.


இதில் மேலும் படிக்கவும் :