ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2020 (21:59 IST)

சினேகாவின் கணவருக்கு ஜோடியாக நடிக்கும் சமந்தா ? பரபரப்பு தகவல்

விஜய், சூர்யா, தனுஷ் உள்பட பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த சமந்தா தற்போது நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
டாப்ஸி நடித்த ’கேம் ஓவர்’ என்ற திரைப்படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் அடுத்த படத்தில் தான் பிரசன்னா-சமந்தா ஜோடியாக நடிக்க உள்ளனர். அஸ்வின் சரவணன் முந்தைய படம் போலவே இந்த படமும் திரில்லர் கதையம்சம் கொண்டது என்றும் இந்த படம் குறித்த அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்றும் ஏப்ரல் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பிரசன்னா, சமந்தா இருவரும் இந்த படத்தில் நடிப்பது உறுதி என்றாலும் இருவரும் ஜோடியாக நடிக்கவில்லை என்றும் இருவரும் முக்கிய வேடத்தில் தான் நடிக்கின்றார்கள் என்றும் இந்த படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக இன்னொரு பிரபல நடிகை நடிக்கவுள்ளதாகவும் ஒரு செய்தி கூறப்படுகிறது. இதுகுறித்த மேலும் சில தகவல்கள் விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
 
சமந்தா ஏற்கனவே விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்க உள்ள ’காத்து வாக்குல ரெரண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது