திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (08:30 IST)

அஜித் படத்தை மிஸ் செய்தவருக்கு அடித்த லக்: சூர்யாவுக்கு வில்லனாகிறாரா?

தல அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் வில்லனாக பிரசன்னா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்த பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தில் தான் நடக்கவில்லை என்றும் எனினும் தல அஜித்துடன் இணைந்து நடிக்க ஆர்வத்துடன் இருப்பதாகவும் பிரசன்னாவே இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அஜித் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த பிரசன்னாவுக்கு தற்போது சூர்யா படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சூர்யா நடிப்பில் ஹரி இயக்க உள்ள கிராமத்து படத்தில் வில்லனாக நடிக்க பிரசன்னாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் முதல் முறையாக சூர்யாவுக்கு பிரசன்னா வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சூர்யா மற்றும் ஹரி மீண்டும் இணையும் இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து சப்ஜெக்ட் என்றும், குடும்ப செண்டிமெண்ட், ஆக்சன், ரொமான்ஸ் கலந்த ஒரு குடும்ப படம் என்றும் கூறப்படுகிறது