திங்கள், 16 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By BALA
Last Modified: புதன், 18 பிப்ரவரி 2026 (11:59 IST)

இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸ அதிகமாக்க நடிகர் செஞ்ச வேலை! இவருக்கா இந்த நிலைமை?

இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸ அதிகமாக்க நடிகர் செஞ்ச வேலை! இவருக்கா இந்த  நிலைமை?
இப்போது அனைவரின் உலகமாக பார்க்கப்படுவது இன்ஸ்டாகிராம்தான். எத்தனையோ சோசியல் மீடியாக்கள் இருந்தாலும் உலகெங்கும் டிரெண்டிங்கில் இருப்பது இன்ஸ்டாதான். எத்தனை உறவுகள் அருகில் இருந்தாலும் இன்ஸ்டாகிராமைத்தான் தன் குடும்பமாக கருதுகிறார்கள்.  ஒரே வீட்டில் வசிக்கும் கணவன் , மனைவி, மகன் என எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் கையில் மொபைல் இருந்தால் போதும் இன்ஸ்டாவில் மூழ்கிவிடுகிறார்கள்.
 
குறிப்பாக அதில் ரீல்ஸுக்குள் மூழ்கிவிட்டால் நேரம் போவதே தெரியாது. இதனால் சில நேரங்களில் குடும்பத்தில் பிரச்சினையே வர ஆரம்பிக்கும். அதே சமயம் இன்று சினிமாவில் பல புதுமுகங்கள் இருக்கிறார்கள். அதற்கு காரணமும் இன்ஸ்டாதான். ஏனெனில் ரீல்ஸ் என்ற பெயரில் எதாவது ஒரு கண்டெண்ட் எடுத்து அதை வீடியோவாக வைத்து இன்ஸ்டாவில் போட்டு விடுகிறார்கள்.
 
அதிக ஃபாலோயர்ஸ் இருந்தால் அவர்கள்தான் அன்றைய செலிபிரிட்டி. இந்த புகழை வைத்துதான் சினிமாவிலும் அவர்களுக்கு வாய்ப்பு வர தொடங்குகிறது. ஏன் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டே சம்பாதிக்கிறவர்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்ஸ்டாவில் எப்படி ஃபாலோயர்ஸ்களை அதிகப்படுத்த என தெரியாமல் ஒரு பிரபல நடிகர் புலம்பும் வீடியோ வைரலாகி வருகிறது.
 
அவர் வேறுயாருமில்லை. நடிகர் ஷாரா. பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்தவர். கோமாளி படத்தில் கூட டாக்டராக வருவார். அவர்தான் இந்தளவு புலம்பியிருக்கிறார். வாய்ப்பு தேடி போனால் இன்ஸ்டாவில் எவ்வளவு ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள் என கேட்கிறார்களாம். அதை வைத்துதான் சம்பளமும் தருவோம் என்று கூறுகிறார்களாம்.
 
அவரை பொறுத்தவரைக்கும் இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸை எப்படி அதிகப்படுத்த வேண்டும் என தெரியாதாம். யாராது சொல்லுங்க என கேட்டிருக்கிறார். அதில் ஒரு ரசிகர் விசில் அடிங்க. உடனே 6 கோடி பேர் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுடுவாங்க என கிண்டலாக கூறியிருக்கிறார்.