சின்ன மருமகள் சீரியலில் இருந்து திடீரென தூக்கப்பட்ட பிக்பாஸ் தாமரை.. என்ன நடந்தது?
விஜய் டிவியின் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமான தாமரை, தற்போது ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' தொடரில் நாயகியின் தாயாராக நடித்து வந்தார். இந்நிலையில், அந்த தொடரிலிருந்து அவர் திடீரென நீக்கப்பட்டு, அவருக்கு பதில் வேறு ஒரு நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தாமரை செல்வி அளித்துள்ள விளக்கம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடக கலைஞராக இருந்த தனக்கு பிக்பாஸ் மேடை மிகப்பெரிய அடையாளத்தை தந்ததாக குறிப்பிட்ட தாமரை, 'சின்ன மருமகள்' சீரியல் வாய்ப்பு மகிழ்ச்சியளித்ததாக கூறினார். இருப்பினும், சினிமா வாய்ப்புகள் மற்றும் இதர நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் ஏற்பட்ட ஒருநாள் கால்ஷீட் குளறுபடியால், தன்னை தொடரிலிருந்து நீக்கிவிட்டதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
ஒரே ஒரு நாள் படப்பிடிப்புக்கு வரமுடியாத காரணத்திற்காக என்னை தூக்கிவிட்டார்கள்" என்று கூறிய தாமரை, இந்த வருத்தத்தை மறந்து, முழுமையாக திரைப்பயணத்தில் கவனம் செலுத்தப்போவதாகவும், ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
Edited by Siva