1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
  4. Peak star's Film Will not be released as planned...

உச்ச நட்சத்திரத்தின் படம் திட்டமிட்டபடி ரிலீஸாகாதாம்...

உச்ச நட்சத்திரம்
உச்ச நட்சத்திரம் நடித்துள்ள ரோபோ படம், திட்டமிட்டபடி ரிலீஸாகாது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ரோபோ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார் உச்ச நட்சத்திரம். அதற்குப் பின் அவர் நடித்த தாதா படமே ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், இன்னும் ரோபோ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறதாம்.
 
ஜனவரி மாத இறுதியில் படத்தை ரிலீஸ் செய்வதாகச் சொன்னார்கள். ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் இன்னும்  நாலைந்து மாதங்கள் ஆகும் போலத் தெரிகிறது. எல்லாம் கிராஃபிக்ஸ் பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வுதானாம். பிரமாண்ட இயக்குநரின் ஐடியாவைச் செயல்படுத்த முடியாமல் கிராஃபிக்ஸ் வல்லுநர்கள் திணறி வருகிறார்களாம். அதனால் நிச்சயம் படம்  தாமதமாகத்தான் ரிலீஸாகும் என்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
அஜித்தின் விஸ்வாசம் படத்தில் ஜோடி சேரும் பாகுபலி நடிகை