வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2017 (22:39 IST)

என்ன ஒரு ஆச்சர்யம்: மீடியாவை விட ஃபாஸ்ட் ஆக அப்டேட் செய்த கமல்ஹாசன்

மெடிக்கல் கல்லூரியில் சேரும் தமிழக மாணவர்களுக்கு நீட் இந்த ஆண்டு இல்லை என்பது சற்று முன் உறுதியாகியது. தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து தமிழக மாணவர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.



 
 
இந்த தகவலை மத்திய சட்ட அமைச்சகம் அதிகாரபூர்வமாக தெரிவித்த ஒருசில வினாடிகளில் இதுகுறித்து  கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ''நன்றி NEET மாணவரின் தவிப்புணர்ந்த சட்ட அமைச்சகத்திற்கும்  அனைத்து கட்சிகளுக்கும்.ஓரு வருட வாய்ப்பு அவசரச் சிகிச்சையே. இனி என்ன செய்வோம்? என்று பதிவு செய்துள்ளார்.
 
இந்திய அளவில் உள்ள முன்னணி ஊடகங்களே பிரேக்கிங் நியூஸ் இதுகுறித்து ஒளிபரப்பு செய்வதற்கு முன்பே கமல் இதுகுறித்து டுவிட்டரில் பதிவு செய்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவரது அப்டேட் வேகத்தை கண்டு அனைவரும் அதிசயித்தனர். இது எப்படி சாத்தியமாயிற்று என்பது ஊடகங்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே ஒரு புரியாத புதிராக உள்ளது.