கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அந்த காமெடி நடிகர் என்ன செய்கிறார்னு தெரியுமா?

Papiksha| Last Updated: வியாழன், 17 அக்டோபர் 2019 (19:18 IST)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடிய நடிகர்களின் பட்டியல் முதலிடம் பிடித்துள்ள அந்த காமெடி நடிகரை பார்த்து பலரும் ஆச்சர்யத்தில் வாய் பிளக்கின்றனர். காமெடி நடிகனாக சினிமாவில் அறிமுகமான அவர் பின்னர் ஸ்டார் நடிகைக்கு ஹீரோவாக நடித்து வேற லெவல் மாஸ் கிளப்பினார். 


 
இதனால் அவரது சம்பளம் ட்ரிபுளாக மாறியது. தூங்குவதற்கு கூட நேரமில்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்து உச்ச நடிகர்களின் படத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கும் அந்த காமெடி நடிகருக்கு அவரது நண்பர் ஒருவர் அறிவுரை கூறினாராம். அதாவது, சம்பாதிக்கும் பணத்தை நிலத்தில் போடுடா உனக்கு எப்போதும் நிலையாக இருக்கும் என்று, அதை கேட்டு அந்த காமெடி நடிகரும் தற்போது நிறைய நிலங்களை வாங்கி குவித்து வருகிறாராம். 
 
சமீபத்தில் தான் பெரிய வீடு ஒன்று கட்டி குடியேறினார். அவரது இந்த அசுர வளர்ச்சியை கண்டு பலரும் பாராட்டினார்கள். நடிகரின் உழைப்பு உண்மையாக இருப்பதால் அவரது வளர்ச்சி பெருகிக்கொண்டே போகிறது. அவரது நல்ல மனசுக்கும் விரைவில் ஏதாவது சுபகாரியம் நடக்கட்டும் என்று அவரது ரசிகர்களும் வேண்டிக்கொள்கின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :