18+ இந்திய விளம்பரத்தில் ஜானி சின்ஸ், ரன்வீர் சிங்! – சர்ச்சைக்குள்ளான விளம்பரம்!
பிரபலமான ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் நடித்து இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள உடலுறவு மருந்துகள் குறித்த விளம்பரம் வைரலாகி வரும் நிலையில் சர்ச்சைக்கும் உள்ளாகியுள்ளது.
நடிகை சன்னி லியோன் போலவே ஆங்கிலத்தில் வெளியாகும் ஆபாச படங்கள் பலவற்றில் நடித்து பின்னர் திரையிலுகலும் ஃபேமஸ் ஆனவர் அமெரிக்காவை சேர்ந்த நடிகர் ஜானி சின்ஸ். இவர் ஒரு சில ஹாலிவுட் திரைப்படங்களிலும், வெப் சிரிஸிலும் கூட நடித்துள்ளார். தற்போது இவருடன் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடித்த இந்திய விளம்பரம் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
உடலுறவு மருந்து, மாத்திரை தொடர்பான அந்த விளம்பரம் ஒரு இந்தி நாடக பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஜானி சின்சுக்கு உடலுறவு சார்ந்த பிரச்சினை இருப்பது போலவும், அது ரன்வீர் சிங் தரும் மாத்திரையால் சரியாவது போலவும் காட்டப்படுகிறது. இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில் ஜானி சின்ஸ் குறித்த ஹேஷ்டேகுகளும் வைரலாகி வருகின்றன.
அதேசமயம் உடலுறவு குறித்த பொருட்களை விற்க சமூக வலைதளங்களில் இவ்வாறான விளம்பரங்களை வெளியிடுவதும், அதில் ரன்வீர் சிங் போன்ற பெரிய ஹீரோக்களே நடிப்பதும் ஏற்புடையதல்ல என்ற ரீதியிலும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக ரன்வீர் சிங் நடத்திய நிர்வாண போட்டோஷூட்டிற்காக அவர் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.