திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J Durai
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2024 (19:17 IST)

ரன்வீர் சிங் 'தி கோட் லைஃப்' படத்தின் ஆன்மாவைத் தொடும் இரண்டாம் போஸ்டரை வெளியிட்டுள்ளார்!

தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸி இயக்கத்தில், நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியாகவுள்ள 'தி கோட் லைஃப்' படத்தின்  முதல் போஸ்டரை அவரது 'சலார்' படத்தின் கோ-ஸ்டார் பிரபாஸ் வெளியிட்டார். 
 
உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள மிகப்பெரிய சர்வைவல் அட்வென்சரான இந்தப் படத்தின் இரண்டாவது பார்வை போஸ்டரை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் இன்று தனது சமூக ஊடக தளத்தில் வெளியிட்டார். படத்தின் போஸ்டர்களில் நடிகர்  பிரித்விராஜின் மாறுபட்ட தோற்றங்கள், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்  படங்களில் ஒன்றாக 'தி கோட் லைஃப்'பை மாற்றியுள்ளது. இப்போது வெளியாகியுள்ள படத்தின் இரண்டாவது தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆர்வத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
 
விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள ’தி கோட் லைஃப்’ படத்தில், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், இந்திய நடிகர்களான அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரவிருக்கும் படத்தின் இசை இயக்கம் மற்றும் ஒலி வடிவமைப்பை அகாடமி விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் செய்துள்ளனர். படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை சுனில் கே.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ. ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார்.
 
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும். இதன் தயாரிப்பு தரம், கதைசொல்லல் மற்றும் நடிப்புத் திறன் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்துள்ளது. இந்திய சினிமாவின் மிகப் பெரிய பாலைவனப் படமான ’தி கோட் லைஃப்’ திரையரங்குகளில் ஏப்ரல் 10, 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
 
விஷுவல் ரொமான்ஸ் பற்றி:
 
விஷுவல் ரொமான்ஸ் என்பது கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். 7 ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில், இந்த நிறுவனம் சிறந்த படைப்புகளைக் கொடுத்து முக்கியமான தயாரிப்பு நிறுவனமாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ‘100 இயர்ஸ் ஆஃப் க்ரிசோஸ்டம்’ என்ற 48 மணிநேரம் நீடித்த ஒரு ஆவணப்படத் தயாரிப்பின் மூலம் விஷுவல் ரொமான்ஸ் சினிமா உலகில் ஒரு மைல்கல்லை எட்டியது. இந்தப் படம் பரவலாகப் பாராட்டப்பட்டது மட்டுமல்லாது, கின்னஸ் புத்தகத்திலும் இது இடம்பெற்றுள்ளது. 
 
இயக்குநர் பிளெஸி இந்தப் படத்தில் சிறப்பான கதையை சொல்லியுள்ளார். ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் ஆறு கேரள மாநில திரைப்பட விருதுகள் உட்பட, இந்திய சினிமாவின் தலைசிறந்த விருதுகளை பிளெஸி பெற்றுள்ளார். பிளெஸி ஐப் தாமஸின் திறமையான இயக்கத்தின் கீழ், விஷுவல் ரொமான்ஸ் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளது. இந்த படமானது  பார்வையாளர்களுக்கு ஒரு புதுவிதமான சினிமா அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும் என்று நம்முகிறோம்.