திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (10:58 IST)

பிறந்தநாள் பார்ட்டியில் ஷங்கருக்கு கோரிக்கை வைத்த பிரபல இயக்குனர்கள்!

இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் முதலில் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் என சொல்லப்பட்ட இந்த படம் இப்போது ஒவ்வொரு பாகமும் சுமார் 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படத்தில் ரண்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் ஷங்கரின் 60 ஆவது பிறந்தநாள் பார்ட்டி ஒன்று நடந்தது. அதில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள் கலந்துகொண்டார்கள். அந்த நிகழ்வில் வேள்பாரி பற்றி பேசப்பட்டதாகவும், அப்போது இயக்குனர்கள் பலரும் வேள்பாரி தமிழ் முகம் உள்ள நடிகர் ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஷங்கருக்கு ஆலோசனை சொன்னதாக சொல்லப்படுகிறது. ஷங்கரும் அதுபற்றி ஆலோசிப்பதாக தெரிவித்துள்ளாராம்.