‘நீர் வீழ்ச்சி’ நடிகைக்கு இப்படியொரு பெயரா?

CM| Last Updated: வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (21:33 IST)
‘நீர் வீழ்ச்சி’ நடிகைக்கு இண்டஸ்ட்ரியில் மோசமான கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் இறுதியில் வெளியான படம் ‘நீர் வீழ்ச்சி’. கருத்தியல் ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் இந்தப் படம் சக்கைபோடு போட்டது. அதில், ஹீரோயினாக நடித்தவருக்கும், படத்தின் இயக்குநருக்கும் ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தன.
வெற்றிப்படத்தில் நடித்த நடிகையைத் தங்கள் படங்களில் புக் செய்வதுதானே தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் வழக்கம்?! ஆனால், பேசுவதற்கு செல்போன் நம்பரைக்கூட தர மறுக்கிறாராம் நடிகை. எதுவாக இருந்தாலும் மெயில் அனுப்புங்க என்று சொல்லி இமெயில் முகவரியை மட்டுமே தருகிறாராம்.

இதற்குப் பின்னணியில் இயக்குநர்தான் இருக்கிறார் என்கிறார்கள். தன்னுடைய அடுத்த படத்திலும் அவரையே நாயகியாக நடிக்கவைக்க முடிவெடுத்துள்ள இயக்குநர், தன் கையைவிட்டு அவர் போய்விடக் கூடாது என்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறார் என்கிறார்கள். காத்து இருக்கிறபோதே தூத்திக் கொள்வதுதான் நல்லது என நடிகை எப்போது உணரப் போகிறாரோ...


இதில் மேலும் படிக்கவும் :