ராசியில்லாத நடிகையா ரகுல் ப்ரீத்சிங்?
ராசியில்லாத நடிகை என ரகுல் ப்ரீத்சிங் மீது முத்திரை குத்தப்பட்டுள்ளது. தமிழில் ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத்சிங். ஆனால், அவரை இங்கு யாரும் கண்டு கொள்ளாததால், தெலுங்குப் பக்கம் ஒதுங்கினார். அங்கு முன்னணி நடிகைகளுள் ஒருவராக ஆன ரகுல் ப்ரீத்சிங், மகேஷ் பாபு ஜோடியாக ‘ஸ்பைடர்’ படத்தின் மூலம் தமிழில் மறுபடியும் எண்ட்ரி ஆனார். ஆனால், அந்தப் படமும் ஊத்திக் கொண்டது.
இருந்தாலும், கார்த்தி ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ நன்றாக ஓடியது. ஆயினும், அடுத்தடுத்து ரகுல் ப்ரீத்சிங் நடிப்பதாக இருந்த இரண்டு படங்கள் அவர் கைநழுவிப் போய்விட்டன. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் சாய் பல்லவியும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த இரண்டு படங்களிலும் ரகுல் ப்ரீத்சிங் நடிப்பதாக இருந்தது.