வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By
Last Modified: புதன், 17 ஜூன் 2020 (09:28 IST)

மூன்றாவது திருமணம் செய்ய போகிறாரா பிக்பாஸ் வனிதா?

தளபதி விஜய் நடித்த ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான வனிதா விஜயகுமார் அதன் பின்னர் ஒருசில படங்களில் நாயகியாக நடித்தார். அதன் பின்னர் கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்தனர்.
 
இதனையடுத்து கடந்த 2007 ஆம் ஆண்டு ஆகாஷை விவாகரத்து செய்த வனிதா விஜயகுமார், ஆனந்தராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2010ம் ஆண்டு மீண்டும் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார் 
 
இந்த நிலையில் சமீபத்தில் ’பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். முதலில் வனிதாவின் படபடப்பான பேச்சை கேட்டு ரசிகர்கள் அவரை வெறுத்தாலும் அவருடைய பேச்சில் இருந்த நியாயத்தை தாமதமாக புரிந்து கொண்டதால் அவருக்கு புகழ் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மூன்று குழந்தைகளுக்கு தாயான வனிதா விஜயகுமார் மூன்றாம் திருமணம் செய்ய இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் ஒரு சில நாட்களில் அவருக்கு மூன்றாவது திருமணம் எளிய முறையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த செய்தியை வனிதா விஜயகுமார் தரப்பிலிருந்து உறுதி செய்யப்படவில்லை என்பதும் இன்று வரை கிசுகிசுவாகவே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது