வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 16 ஜூன் 2020 (23:04 IST)

காதலனை அறிமுகப்படுத்திய பிரபல நடிகை !

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான மச்சி என்ற தமிழ்ப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை சுபா புஞ்சனா. பின்னர் இவர் நடித்து வந்த தமிழ்த்திரைப்படங்கள் பெரிய வெற்றி பெறாத நிலையில் கன்னட சினிமா உலகில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

அங்கு சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதினை பெற்று அசத்தினார். இந்நிலையில் நடிகை சுபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  தனது திருமணம் குறித்த செய்தியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : நான் சுமந்த் பில்லவா என்பவரைக் காதலிப்பதாகவும் கொரோனா ஊரடங்கு முடிந்த பின் டிசம்பரில் எங்களுக்கு  திருமணம் நடக்கவுள்ளது என்று பதிவிட்ட் தனது காதலருடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.