வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜூன் 2020 (08:08 IST)

திருமண வரவேற்பில் மயங்கி விழுந்த மாப்பிள்ளை – கிராமமே தனிமைப்படுத்தல்!

ஆந்திராவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் மயங்கி விழுந்ததை அடுத்து அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவின் பக்திகொண்டா மண்டலம் பகுதியை சேர்ந்த அந்த இளைஞர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்ததால் கடந்த 10 ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அவருக்கு நேற்று முன் தினம் திருமணம் நடந்துள்ளது. அதையடுத்து அன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டு இருக்கும்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் கர்னூலில் உள்ள கொரொனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அந்த திருமணத்தில் கலந்துகொண்ட மணமகள் உள்ளிட்ட அனைவருமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.