வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 11 ஜூன் 2020 (17:31 IST)

திருமணத்தில் தோஷம் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு !

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் பவன். இவருக்கு ப்ரீத்தி என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. கடந்த இரு வாரங்களாக திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் ப்ரீத்தி தனது வீட்டு  அறையில் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரமாகியும் ப்ரீத்தி கதவைத் திறக்காததால் அவரது தங்கை அறைக்குள் சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்குவதைப் பார்த்த அவரும் அவரது குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்து வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது ப்ரீத்தி எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.  அவர் கைப்பட எழுதியதாக தெரிகிறது. அதில், அவருக்கு திருமணத்தில் தோஷம் இருந்துள்ளதாகவும் தனக்குக் கல்யாணம் நடக்காது என வீட்டில் தெரிவித்துள்ளார்..இந்நிலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இத்தனைக்கும் மேட்ரிமோனியல் மூலமாக பவனைப் பார்த்து இருவரும் பழகி இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.