1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Murugan
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (17:33 IST)

ஓவியாவை பிக் அப் பண்ண வையாபுரி முயற்சித்தார் - புரணி பேசும் ரைசா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வெளியேறிய ஓவியாவை, வையாபுரியுடன் இணைத்து புரணி பேசும் வேலையில் ரைசா இறங்கியுள்ளார்.


 

 
பிக்பாஸ் வீட்டிற்கு புதிதாக வந்துள்ள நடிகை சுஜா வருணையையும், ஆரவ்வையும் தொடர்பு படுத்தி வையாபுரி ‘கட்டிப்புடி..கட்டிப்புடிடா’ என்ற பாடலை பாடியதாக புகார் எழுந்தது.
 
அந்நிலையில்தான், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் காயத்ரி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், விஜய் தொலைக்காட்சி ஒரு புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில்,  ஆரவ்விடம் நடிகர் வையாபுரி பற்றி புரணி பேசும் ரைசா “ஒரு முறை செல்பி எடுத்த போது வையாபுரி ஒரு கதை சொன்னார். அதில், ஓவியாவை நான் பிக் அப் செய்ய முயற்சி செய்தேன். ஆனால், அவரை ஏற்கனவே பிக் -அப் பண்ணிட்டாங்கன்னு’ சொன்னார். இப்படி பேசுறவர் கண்டிப்பா சுஜாவை பற்றி அப்படி பாட்டு பாடியிருப்பர். எனக்கு சந்தேகமே இல்லை” எனக் கூறுகிறார்.