ஓவியாவைப் புகழ்ந்து பாடிய அனிருத்
ஓவியாவின் புகழ்பெற்ற வாக்கியமான ‘நீங்க ஷட்டப் பண்ணுங்க’ பாடலைப் பாடியிருக்கிறார் அனிருத்.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவியா பேசிய ‘நீங்க ஷட்டப் பண்ணுங்க’ வாக்கியம், மிகப்பெரிய வைரலானது. கஞ்சா கருப்புவை நோக்கி அந்த வாக்கியத்தைச் சொன்னார் ஓவியா. இதையே பாடலின் முதல் வரியாகக் கொண்டு ஒரு பாடலை உருவாக்கிவிட்டனர் ‘பலூன்’ படக்குழுவினர்.
சினிஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஜெய், அஞ்சலி, ஜனனி அய்யர் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் புரமோ பாடலான இதை, அருண்ராஜ் காமராஜ் எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் பாடலை, அனிருத் பாடியுள்ளார். ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்தப் பாடல் ரிலீஸாக இருக்கிறது.