செவ்வாய், 13 ஜனவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By bala
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2016 (14:25 IST)

அந்த நடிகையும் விவாகரத்து செய்ய முடிவா?: அதிர்ச்சியில் ரசிகர்கள்

அந்த நடிகையும் விவாகரத்து செய்ய முடிவா?: அதிர்ச்சியில் ரசிகர்கள்
கோலிவுட்டில் சமீபகாலமாக நடிகைகள் விவாகரத்து பெற்றுவருவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பால் நடிகை, தொடையழகி நடிகை, திவ்ய நடிகை,உச்ச நடிகர் மகள் என எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது மல்லிகை நடிகை பெயரும் பேசப்படுகிறது.


 

கேரளாவை சேர்ந்த இவர் தமிழில் வேகமாக ஓடும் படத்தில் அறிமுகம் ஆகி தொடர்ந்து தளபதி, தல, அரசியல் தலைவர் உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இசை கலைஞர் ஒருவரை மணக்க உள்ளதாக பேசப்பட்டுவந்த நிலையில் திடீரென வெளிநாட்டில் பணியாற்றும் என்ஜினியர் ஒருவரை திருமணம் செய்தார்.

கடந்த சில மாதங்களாகவே கணவரை பிரிந்து வாழும் நடிகை, தற்போது விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை மலையாள ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.