திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (21:35 IST)

இதென்னடா சித்திர நடிகைக்கு வந்த சோதனை..?

திடீர் புகழ் அடைந்தபிறகும் கூட சித்திர நடிகையைப் படத்தில் புக் பண்ண இயக்குநர்கள் தயங்குகிறார்களாம்.


 
 
டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோ மூலம் திடீர் பாப்புலரானவர் சித்திர நடிகை. ரசிகர்கள், ஆர்மியினராக மாறிய அற்புத சம்பவம், வேறெந்த நடிகைக்கும் கிடைக்காத பாக்கியம். 
 
இந்த பாப்புலாரிட்டியால், நடிகைக்கு ஏகப்பட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றார்கள். ஆனால், பல வருடங்களாக பெட்டியில் தூங்கிய படங்களைத்தான் தூசி தட்டி எடுக்கிறார்களே தவிர, புதுப்படம் ஒன்றிலும் கமிட்டாகவில்லையாம். 
 
சித்திர நடிகையே ஏற்கெனவே நடித்து ஹிட்டான இரண்டு படங்களின் இரண்டாம் பாகம் தயாராகிறது. அதில் கூட நடிகையை கமிட் செய்யவில்லையாம். காரணம் புரியாமல் நடிகையும், அவருடைய ஆர்மியினரும் புலம்பி வருகின்றனர்.