1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. PM Narendra Modi Likely to Visit Kerala's Jatayu Earth Centre Following Ramayana Release

கேரளா ஜடாயு பூமி மையத்திற்கு குவியும் சுற்றுலா பயணிகள்.. பிரதமரும் ஆவல்.. ராமாயணா திரைப்படம் தான் காரணமா?

பிரதமர் மோடி
பாலிவுட்டில் 'ராமாயணா' திரைப்படம் வெளியானதை தொடர்ந்து, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஜடாயு பூமி மையத்திற்கு  பிரதமர் நரேந்திர மோடி வருகை தர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சீதையை கடத்தி சென்ற ராவணனுடன் ஜடாயு பறவை போரிட்டு, சிறகுகள் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கும் காட்சியை தத்ரூபமாக சித்தரிக்கும் இந்த பிரம்மாண்ட சிற்பம், 'ராமாயணா' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது. திரைப்பட இயக்குநரும் சிற்பியுமான ராஜீவ் அஞ்சலால் உருவாக்கப்பட்ட இந்த சுற்றுச்சூழல் சுற்றுலா தலம், தற்போது தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
 
இந்நிலையில், மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முதலில் சடையமங்கலத்தில் உள்ள ஜடாயு பாறைக்கு நேரில் சென்று பார்வையிட உள்ளதாகவும், அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் அங்கு வருகை தர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், ஜடாயு மையத்தின் நிறுவனர் ராஜீவ் அஞ்சலை சந்தித்த அமைச்சர் ஷெகாவத், டெல்லி பைனாலே கண்காட்சியில் ஜடாயு சிற்பத்தின் படைப்பை காட்சிப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இந்த விவகாரம் பிரதமரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சுரேஷ் கோபி குறிப்பிட்டுள்ளார்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
பினாமி பெயர்களில் குவாரிகள்!.. மூர்த்தி வீட்டில் சோதனை நடப்பதன் பின்னணி?...