அரசன் சம்பவம் பண்ணும்!.. தீபாவளிக்கு தியேட்டரில் ரிலீஸ்!.. தெறிக்கவிட்ட சிம்பு...
வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது சிம்பு அரசன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே தனுஷை வைத்து வெற்றி மாறன் இயக்கிய வட சென்னை படத்தின் நீட்சியாக இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படம் தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோ கூட சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில்தான், நேற்று ஒரு திரைப்பட விழாவில் பேசிய சிம்பு அரசன் படம் பொங்கலுக்கு திரைக்கு வராது.. படத்தின் தரத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இந்த கடினமான முடிவை எடுக்கப்பட்டிருக்கிறது.
உங்களுக்கு நான் வாக்களித்தபடி அரசன் உடன் நிச்சயமாக சம்பவம் பண்ணும்.. அதேநேரம் World of Arasan என்கிற பெயரில் சிறப்பு தொகுப்பு தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் எனக்கூறியிருக்கிறார். இது சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.