இன்று திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்
வார இறுதி நாட்களைக் குறிவைத்து வெள்ளிதோறும் புதிய திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இன்று திரையரங்குகளில் வெவ்வேறு ஜானர்களில் அமைந்த மூன்று திரைப்படங்கள் ரசிகர்களின் பார்வைக்கு வந்துள்ளன. அவற்றைப் பற்றிய ஒரு பார்வை:
1. ஐ எம் கேம் (I'm Game)
துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்துள்ள அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ஐ எம் கேம் . பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தில், அதிரடியான ஆக்ஷன் காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் விறுவிறுப்பூட்டும் ட்விஸ்ட்டுகள் நிறைந்துள்ளன. திரையரங்க அனுபவத்தை விரும்பும் இளசுகளுக்கும், துல்கர் சல்மானின் ரசிகர்களுக்கும் இது இந்த வாரத்தின் முக்கிய சாய்ஸாக அமைந்துள்ளது.
2. இம்மார்டல்
ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் இம்மார்டல். க்ரைம், மிஸ்ட்ரி மற்றும் சஸ்பென்ஸ் கதைக் களங்களை விரும்பும் ரசிகர்களைக் குறிவைத்து களம் இறங்கியுள்ளது இப்படம் . அடுத்தடுத்து நிகழும் மர்ம முடிச்சுகள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் துப்பறியும் பாணியிலான விறுவிறுப்பான காட்சிகள் நிறைந்த புலனாய்வுத் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. க்ரைம் த்ரில்லர் பிரியர்களுக்கு இந்த வார இறுதியில் புதிய த்ரில் அனுபவத்தை இப்படம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. பெத்லகேம் குடும்ப யூனிட் (தமிழ் வெர்ஷன்)
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் குடும்பத்தோடு திரையரங்கு வந்து படம் பார்க்க நினைக்கும் ரசிகர்களுக்காக, மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் தமிழ் பதிப்பு இன்று திரைக்கு வந்துள்ளது. கலகலப்பான நகைச்சுவை, அழகான உறவுகளின் பின்னணி மற்றும் மனதைத் தொடும் எமோஷனல் தருணங்களுடன் கூடிய ஃபீல்-குட் திரைப்படமாக இது அமைந்துள்ளது. இப்படம் 23 கோடியில் எடுக்கப்பட்டு ருஇஉ 200 கோடி வசூலை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
