1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 2 ஜனவரி 2019 (12:39 IST)

யமஹாவின் புத்தாண்டு வரவு- எம்.டி.15

இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் யமஹா நிறுவனம் புத்தாண்டு வரமாக புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளது.


 
எம்.டி.15 என்ற பெயரில் புதிய மோட்டார்  சைக்கிளை உருவாக்கி வரும்  யமஹா நிறுவனம் அதில் ஏ.பி.எஸ். வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.  2019ம் ஆண்டு வெளிவரும் 125 சிசி பைக்குகள் அனைத்திலும் கட்டாயம்  ஏ.பி.எஸ் ( ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம்) வசதி இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளதால். புதிய வாகனங்களில்  இத்தகைய வசதி இடம் பெறும் வகையில் யமஹா வேலைகளை செய்து வருகிறது.
 
இந்த எம்.டி15 பந்தய மோட்டார் சைக்கிளைப் போன்ற தோற்றம் உடையது. இதனால் இந்த வாகனம் இளைஞர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 
வரும் 21ம் தேதி அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. இல்லையெனில் எப்.இஸட் ரகம் மேம்படுத்தி அறிமுகம் செய்யப்படலாம்.  எம்.டி.15 மோட்டார் சைக்கிளில், முன்புற ஸ்விட்ச் கியர் மற்றும் கிளாஸ்டர் ஆகியவை உள்ளன. 155.1 சிசி திறனுடய இந்த வாகனத்தில், அதிகபட்ச பவர் 19.30 ஹெச்பி.  ஒரு சிலிண்டர் இடம் பெற்றுள்ளது.
 
அதிக பட்ச டாக்யூ 15 என்எம். 6 கியர்கள் உள்ளன. சீட் உயரம்  805mm.  எரிபொருள் டேக் கொள்ளளவு,10.2 லிட்டர், அதிகபட்ச வேகம் 130 கிலோமீட்டர். எடை ( Kerb/Wet Weight) 135 கிலோ, 
 
எம்.டி15  மோட்டார் சைக்கிளின் டெல்லி ஷோரும் விலை  ரூ.1,10000 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இளைஞர்களைக வரும் அட்ராக்டிவ் லுக், தரமான வசதிகள், சக்தி வாய்ந்த இன்ஜின்,  சக்திவாய்ந்த பிரேக்கிங் சிஸ்டம்,  ஆகியவற்றுடன், பந்தயத்துக்கு உகந்த வகையில் எம்.டி.15 பைக் இருக்கும் என பைக் பிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.