1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 ஜூலை 2023 (13:27 IST)

Dolby Atmos-ல் ஸ்மார்ட்போன் விலையில் சூப்பர் ஸ்மார்ட் டிவி! – Xiaomi Smart TV A Series!

Xiaomi A Smart TV
இந்தியாவில் ஸ்மார்ட்போன் மாடல்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் ஷாவ்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் டிவிகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.



இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் கோலோச்சும் நிறுவனங்களில் ஷாவ்மி நிறுவனமும் ஒன்று. ஷாவ்மி நிறுவனம் ஏற்கனவே தனது பல எலெக்ட்ரானிக் பொருட்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மிகவும் குறைந்த விலையில் Xiaomi Smart TV A Series என்ற ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது.

Metal Bezel டிசைனை கொண்ட இந்த Xiaomi Smart TV A Series ஸ்மார்ட் டிவியின் 32 இன்ச் டிவி HD தரத்திலும், 40 மற்றும் 43 இன்ச் டிவி மாடல்கள் FHD தரத்திலும் வெளியாகியுள்ளன. இந்த ஸ்மார்ட் டிவி 1.5 ஜிபி ரேம் கொள்ளளவை கொண்டுள்ளது. 8 ஜிபி இண்டெர்னல் மெமரி உள்ளது.

டூவல் வைஃபை வசதிக் கொண்ட இந்த ஸ்மார்ட் டிவி ப்ளூடூத் 5.0 வசதியையும் கொண்டுள்ளது. இந்த மாடல்களில் 20W Dolby Atmos ஸ்பீக்கர்கள் உள்ளன.

இவ்வளவு சிறப்பு வசதிகள் கொண்ட இந்த Xiaomi Smart TV A Series ஸ்மார்டிவியின் 32 இன்ச் மாடலின் விலை ரூ.13,999 ஆகும். 40 இன்ச் மாடல் ரூ.22,999க்கும், 43 இன்ச் மாடலின் விலை 24,999க்கும் விற்பனையாகிறது.

Edit by Prasanth.K